சிவகாசி :
சிவகாசி முக்கியமான தொழில் நகரமாகும்.
லித்தோகிராபிக், ஆப்செட் பிரிண்டிங்கிற்கு புகழ்பெற்ற நகர். பட்டாசு
மற்றும் தீப்பெட்டி தொழில் நகரின் முக்கிய தொழிலாகும். சிவகாசி, சாத்தூர்
பகுதிகளில் தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. ஏறக்குறைய
4500 தீப்பெட்டி தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. 400 பட்டாசு தொழிற்சாலைகள்
உள்ளன. இந்தியாவின் 70 சதவீத பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தி இங்கு
நடைபெறுகிறது. அதிக அளவிலான பட்டாசு ஏற்றுமதியும் நடைபெறுகிறது. சிவகாசி
ஆப்செட் பிரின்டிங் தொழிலுக்கு பெயர் பெற்றதாகும். புத்தகங்கள்,
போஸ்டர்கள், வாழ்த்து அட்டைகள், டைரிகள் போன்றவை இங்கு
தயாரிக்கப்படுகின்றன.