செண்பகதோப்பு சரணாலயம் :
ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு என்ற இடத்தில் 480 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. வனங்கள் அடர்ந்த பகுதி இது. சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக இது அறிவிக்கப்பட்டு உள்ளது. வனவிலங்கு சரணாலயத்தில் புலி, சிறுத்தை, மான், குரங்குகள், சிங்கவால் குரங்குகள், லாங்கூர்கள், பறக்கும் அணில்கள், 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் அரிய வகை அணில்கள் வேறு எங்கும் காண கிடைக்காததாகும். இங்குள்ள ராக்காச்சியம்மன் கோயில், பேச்சியம்மன் கோயில் பிரசித்தமானது. கோயில்கள் அருகே ஓடை சலசலத்து செல்கிறது. மேலும் மலை மேல் 5 கிலோ மீட்டர் தூரம் ஏறிச் சென்றால், காட்டழகர் கோயில் உள்ளது. இங்குள்ள நூபுர கங்கையில் எப்போதும் வற்றாமல் தண்ணீர் விழும். இதில் குளிக்கலாம். திருவில்லிப்புத்தூரில் இருந்து காலை, மாலை நேரங்களில் செண்பகத்தோப்புக்கு பஸ் வசதி உள்ளது. ஆட்டோக்களிலும் செல்லலாம். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காட்டழகர் கோயிலுக்கு ஏராளமானவர்கள் வருகிறார்கள். இங்கு தான் மண்டூக முனிவருக்கு, விஷ்ணு சாப விமோசனம் கொடுத்ததாக ஐதீகம் உள்ளது.