ரமண மகரிஷி:- 1879ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி திருச்சுழியில்
பிறந்தார். அவரது தாயார் அழகம்மாள், தந்தை சுந்தரம் ஐயர். அவர் வாழ்ந்த
வீடு சுந்தர மந்திரம். சேதுபதி ஆரம்பப்பள்ளியில் அவர் கல்வி பயின்றார்.
அவருடைய பெயரால் 1988ம் ஆண்டு குண்டாற்றின் கரையில் ஆசிரமம்
அமைக்கப்பட்டது.