பிளவக்கல் அணை

பிளவக்கல் அணை:
விருதுநகர் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட சுற்றுலா தலம் பிளவக்கல் அணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நான்கு புறமும் மலைகள் சூழ அமைந்துள்ளது. திருவில்லிபுத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. வத்திராயிருப்பு, கூமாப்பட்டி பகுதியில் இருந்து ஆட்டோக்களில் செல்லலாம். அணையில் மீன் பண்ணை உள்ளது. பல்வேறு வகை மீன்களை இங்கு ரசிக்கலாம். சிறுவர் பூங்காவும் உள்ளது. பிளவக்கல் அணைப்பகுதி சிறந்த பொழுதுபோக்கு இடமாகும். இந்த அணை பெரியார் அணை, கோவிலார் அணை என இரு பகுதியாக உள்ளது. இயற்கை சூழ்ந்த இந்த இடத்தில் அழகான தோட்டங்கள் உள்ளன. படகு சவாரியும் உள்ளது.