ஆண்டாள் கோயில்
விருதுநகரில் இருந்து 35 கிமீ தொலைவிலும், அருப்புக்கோட்டையில் இருந்து 16 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது திருச்சுழி. ரமண மகரிஷி அவதரித்த புண்ணிய தலம். ராமேஸ்வரம், திருச்செந்தூர் சென்று திரும்பும் பக்தர்கள் இங்கு வந்து ரமண மகரிஷியின் இல்லத்தை பார்த்து விட்டு திருமேனி நாதர் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இதன் கோபுரமே தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு. இவை தவிர மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஏழைகளின் திருப்பதி என புகழப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், விருதுநகர் மாரியம்மன் கோயில் போன்ற கோயில்களும் உள்ளன. விருதுநகரில் கர்மவீரர் காமராஜர் நினைவிடத்தையும் பார்க்கலாம்.