இருக்கன்குடி மாரியம்மன் கோயில் :
விருதுநகரில் இருந்து 32 கி.மீ தூரத்திலும், மதுரையில் இருந்து 90 கி.மீ தூரத்திலும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. வைப்பாறு, அர்ச்சுணன் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே மணல் திட்டாயிருக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று. ஆண்டு முழுவதும் பக்தர்கள் குவிகிறார்கள். இங்கு தங்குவதற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறைகள் உள்ளன. விருதுநகர், சாத்தூரில் இருந்து பஸ் வசதி உள்ளது.