விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் 8 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    அருப்புக்கோட்டை
    காரியாப்பட்டி
    இராஜபாளையம்
    சாத்தூர்
    சிவகாசி
    ஸ்ரீவில்லிப்புத்தூர்
    திருச்சுழி
    விருதுநகர்

ராஜபாளையத்தில் இருந்து 9 கிமீ தூரத்தில் உள்ளது அய்யனார் அருவி.  இதன் அருகில் நீர்காத்த அய்யனார் கோவில் உள்ளது. இங்கு மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளின் பசுமையை ரசித்தவாறே அருவியில் குளிப்பது அலாதியானது. ராஜபாளையத்தில் இருந்து காலை, மாலையில் பஸ் வசதி உள்ளது. இங்கு தங்குவதற்கு விடுதி வசதியோ, ஓட்டல்களோ இல்லை.

செண்பக தோப்பு

திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகத்தோப்பு. வனங்கள் அடர்ந்த பகுதியான இது சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள ராக்காச்சியம்மன் கோயில், பேச்சியம்மன் கோயில் பிரசித்தமானது. கோயில்கள் அருகே ஓடை சலசலத்து செல்கிறது. மேலும் மலை மேல் 5 கிலோ மீட்டர் தூரம் ஏறிச் சென்றால், காட்டழகர் கோயில் உள்ளது. இங்குள்ள நூபுர கங்கையில் எப்போதும் வற்றாமல் தண்ணீர் விழும். இதில் குளிக்கலாம். திருவில்லிப்புத்தூரில் இருந்து காலை, மாலை நேரங்களில் செண்பகத்தோப்புக்கு பஸ் வசதி உள்ளது. ஆட்டோக்களிலும் செல்லலாம்.  புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காட்டழகர் கோயிலுக்கு ஏராளமானவர்கள் வருகிறார்கள். இங்கு தான் மண்டூக முனிவருக்கு, விஷ்ணு சாப விமோசனம் கொடுத்ததாக ஐதீகம் உள்ளது.

பிளவக்கல் அணை

விருதுநகர் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட சுற்றுலா தலம் பிளவக்கல் அணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நான்கு புறமும் மலைகள் சூழ அமைந்துள்ளது. திருவில்லிபுத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. வத்திராயிருப்பு, கூமாப்பட்டி பகுதியில் இருந்து ஆட்டோக்களில் செல்லலாம். அணையில் மீன் பண்ணை உள்ளது. பல்வேறு வகை மீன்களை இங்கு ரசிக்கலாம். சிறுவர் பூங்காவும் உள்ளது.

தாணிப்பாறை

வத்திராயிருப்பு அருகே பார்க்க வேண்டிய இடம் தாணிப்பாறை. இங்கிருந்து தான் சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மலை ஏறுகிறார்கள். தாணிப்பாறையில் அழகிய நீர்வீழ்ச்சி உள்ளது. மேலும் தண்ணீரில் சறுக்கி விளையாடும் வகையில் பாறைகள் இயற்கையாகவே அமைந்துள்ளது இதன் சிறப்பு அம்சம். வத்திராயிருப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்

விருதுநகரில் இருந்து 34 கிமீ தொலைவிலும், சாத்தூரில் இருந்து 8 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோயில். கோயில் அருகிலேயே வைப்பாற்று நீரை தடுத்து நிறுத்தி அணை கட்டப்பட்டு உள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று. ஆண்டு முழுவதும் பக்தர்கள் குவிகிறார்கள். இங்கு தங்குவதற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறைகள் உள்ளன. விருதுநகர், சாத்தூரில் இருந்து பஸ் வசதி உள்ளது.

ஆண்டாள் கோயில்

விருதுநகரில் இருந்து 35 கிமீ தொலைவிலும், அருப்புக்கோட்டையில் இருந்து 16 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது திருச்சுழி. ரமண மகரிஷி அவதரித்த புண்ணிய தலம். ராமேஸ்வரம், திருச்செந்தூர் சென்று திரும்பும் பக்தர்கள் இங்கு வந்து ரமண மகரிஷியின் இல்லத்தை பார்த்து விட்டு திருமேனி நாதர் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இதன் கோபுரமே தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு. இவை தவிர மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஏழைகளின் திருப்பதி என புகழப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், விருதுநகர் மாரியம்மன் கோயில் போன்ற கோயில்களும் உள்ளன. விருதுநகரில் கர்மவீரர் காமராஜர் நினைவிடத்தையும் பார்க்கலாம்.

ருசிக்க..

விருதுநகர் சாப்பாட்டு பிரியர்களுக்கு ஏற்ற இடம். சாத்தூர் காரசேவு மிகவும் விசேஷமானது. திருவில்லிபுத்தூர் பால்கோவா உலகப்புகழ் பெற்றது. விருதுநகரில் கிடைக்கும் நெய்யில் பொரித்த புரோட்டா வேறெங்கும் இல்லாத அளவு ருசியானது. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=6528#sthash.WIJDCOo3.dpuf
அய்யனார் அருவி